#BREAKING தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்.. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Apr 18, 2021, 6:53 PM IST
Highlights

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கொரோனா 2வது அலை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ நெருங்கி வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பது குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில்  தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சன்,  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுப்படும். ஏப்ரல் 20ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். 

click me!