அடுத்த விக்கெட் அமைச்சர் நிலோபர் கபில், ஆதி ராஜாராம்

 
Published : Feb 11, 2017, 05:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
அடுத்த விக்கெட் அமைச்சர் நிலோபர் கபில், ஆதி ராஜாராம்

சுருக்கம்

ஓபிஎஸ்சுக்கு பெருகி வரும் ஆதரவையடுத்து அடுத்தபடியாக அமைச்சர் நிலோபர் கபில், டாக்டர் வேணுகோபால் எம்.பி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் ஆகியோர் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா - ஓபிஎஸ் அணியாக பிரிந்து பரபரப்பான அரசியல் காட்சிகள் அதிமுகவில் அரங்கேறி வரும் வேலையில் நிமிடத்துக்கு நிமிடம் டி20 கிரிக்கெட் போல் சசிகலா தரப்பு விக்கெட்டுகள் விழுந்து வருகின்றன.

நீங்கள் போய் விட்டீர்களா அடுத்து நான் வருகிறேன் என்று அடுத்தடுத்து அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் விஐபிக்கள் ஓபிஎஸ் அணியில் இணைகின்றனர்.

கடைசி வரவாக யாருமே எதிர்பார்க்காத பொன்னையன் திடீரென வர ஓபிஎஸ் அணியில் உற்சாகம் தொற்றி கொண்டது.

இதையடுத்து அமைச்சர் நிலோபர் கபில், சசிகலா வட்டாரத்திற்கு மிக நெருக்கமான டாக்டர் வேணுகோபால் எம்பி, மீனவர் அணி செயலராகவும் தென் சென்னை மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்த முன்னாள் மா.செ ஆதி ராஜாராம் உள்ளிட்டோர் இன்று இரவுக்குள் ஓபிஎஸ்சை சந்தித்து இணையவுள்ளனர்.

 

இது தவிர எம்பிக்கள் அமைச்சர்கள் என ஓபிஎஸ் அணியில் நாளை அதிக அளவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!