அடுத்த தமிழக முதல்வர் எடப்பாடியா..? மு.க.ஸ்டாலினா..? டி.டி.வி எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Apr 5, 2019, 6:23 PM IST
Highlights

18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல், ஆட்சியில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தப்போவது உறுதியாகி இருக்கிறது. 
 

18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல், ஆட்சியில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தப்போவது உறுதியாகி இருக்கிறது. 

எடபாடி பழனிசாமி தலைமையிலான தமிழக சட்டப் பேரவையில் தற்போது அதிமுகவின் பலம் 113 ஆக உள்ளது. அதிமுக சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகர் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய 3 பேரும், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோரும் அடக்கம். இந்த ஐவரில் தனியரசு, கருணாஸ் தவிர மற்ற மூவரும் எடப்பாடி அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால், அதிமுகவின் பலம் 113 -ல் இருந்து 108 ஆகக் குறைந்துள்ளது. திமுக உறுப்பினர்கள் 88 பேருடன் காங்கிரசில் 8 பேரும், முஸ்லீம் லீக் உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக உள்ளதால் திமுக கூட்டணியின் பலம் 97 ஆக உள்ளது.

காலியாக உள்ள 22 தொகுதிகளில் மொத்தமுள்ள 212 உறுப்பினர்களில் அதிமுகவுக்கு நூலிழையில் பெரும்பான்மை வகித்து ஆட்சி நடத்தி வருகிறது. நடைபெற உள்ள 18 தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது 7 இடங்களில் வென்றால் மட்டுமே எடப்பாடி அரசு பெரும்பான்மையுடன் நீடிக்க முடியும். திமுகவோ 18-ல் 16 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

டி.டி.வி.தினகரனின் அமமுக தரப்பில் நான்கைந்து பேர் வெற்றி பெற்று, அதிமுக 2 அல்லது 3 தொகுதிகளில் மட்டுமே வென்றால் எடப்பாடி ஆட்சி  கவிழும் நிலை உருவாகலாம். அல்லது ஐந்து அல்லது 6 எம்எல்ஏக்கள் அமமுக தரப்பில் இருக்கும் பட்சத்தில் ஆட்சியை முடிவு செய்யும் துருப்புச் சீட்டாக டி.டி.வி.தினகரன் இருவெடுப்பார். திமுக பக்கம் தினகரன் ஆதரவளித்தால் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து திமுக ஆட்சிக் கட்டிலில் அமரும்.

தற்போதைய சூழலில் அதிமுக அமைச்சர்களில் பலரும், பதவிக்காக டி.டி.வி.தினகரன் பக்கம் சென்று கட்சியையும், ஆட்சியையும் நீங்களே வழி நடத்துங்கள் என சரணடைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த தேர்தலில் தன் பின்னால் தான் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் என்பதை தினகரன் நிரூபித்துக் காட்டினால், ஆட்சியும், கட்சியும் தினகரன் கைவசம் வரும் என்று அடித்துக் கூறி வருகின்றனர் அமமுகவினர்.

தற்போது வெளியாகி இருக்கும் கருத்துக் கணிப்பில் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளிலும் அமமுக 5 தொகுதிகளிலும் அதிமுக 4 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக கூறுகின்றன. ஆக மொத்தத்தில் அடுத்து தமிழகத்தில் யாருடைய ஆட்சி நடக்கும் என்பதை முடிவு செய்யும் நபராக டி.டி.வி உருவெடுக்கப்போகிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.  

click me!