வெற்றிக்கு முட்டி மோதும் மோடி !! நாடு முழுவதும் எடுக்கப்பட்ட சர்வே ! பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ? நியூஸ்18 லேட்டஸ்ட் கணிப்பு…

By Selvanayagam PFirst Published Apr 9, 2019, 7:01 AM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் சி.என்.என்.நியூஸ் 18  சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் கணிப்பு  பாஜக  கூட்டணிக்கு 263 தொகுதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வரும் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலில்,  எப்படியாவதுமு ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவும்,  ஆட்சியை பிடிக்க காங்திரஸ் கட்சியும்ம் முட்டி மோதுவதால், தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. 

கட்சி தலைவர்கள் நாடு முழுவதும் அனல் பரப்பும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சி.என்.என்., நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பில், தனிப்பெரும் கட்சியாக பாஜக  உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பாஜக கூட்டணிக்கு 263 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 76 தொகுதிகள் குறைவு. 

காங்., கூட்டணிக்கு 139 இடங்களும், மற்ற கட்சிகள் 141 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட காங்கிரஸ் கட்சி., 56 தொகுகளிலும், மற்ற கட்சிகள் 20 தொகுதிகளிலும் அதிக வெற்றிகள் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் இந்தியாவை பொறுத்தவரை, மொத்தமுள்ள 129 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி 28, காங்கிரஸ்., கூட்டணி 49 மற்றும் பிற கட்சிகள் 52 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், திமுக கூட்டணிக்கு 21, அதிமுக கூட்டணிக்கு 12 மற்றும் அமமுக., கட்சிக்கு 6 தொகுதிகள் கிடைக்கும். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 19, தெலுங்கு தேசம் கட்சி 6 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எங்கும் வெற்றி கிடைக்காது.

கர்நாடகாவில் பாஜக  கூட்டணிக்கு 16, காங்கிரஸ் கூட்டணிக்கு 12 இடங்கள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்., 15, காங்கிரஸ் 1 மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெறும்.

கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பாஜகவுக்கு எந்த தொகுதியும் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!