தமிழகத்தில் தொடர்ந்து முந்தும் திமுக கூட்டணி... கருத்துக்கணிப்பில் புதிய தகவல்கள்!

Published : Apr 09, 2019, 06:28 AM IST
தமிழகத்தில் தொடர்ந்து முந்தும் திமுக கூட்டணி... கருத்துக்கணிப்பில் புதிய  தகவல்கள்!

சுருக்கம்

தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் - விஎம்ஆர் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று இரவு வெளியாயின. மத்தியில் பாஜக மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்களைவிட 7 தொகுதிகளை கூடுதலாகப் பெறும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணி 150 தொகுதிகளில் வெற்று பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் அமோக ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 33 தொகுதிகளை வெல்லும் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக கூட்டணி வெறும் 6 இடங்களை மட்டுமே வெல்லும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஓரிடமும் கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.


கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 53.12 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அதிமுக - பாஜக கூட்டணிக்கு 39.61 சதவீதம் பேரும் பிற கட்சிகளுக்கு 7.27 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பில்க் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
கடந்த மார்ச் மாதம் டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 34 தொகுதிகளில் வெல்லும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 33 ஆக குறைந்துள்ளது. மற்றபடி கருத்துக்கணிப்பில் பெரிய மாற்றம் தெரியவில்லை.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!