புது யூனிபாஃர்மில்  ஜொலிக்கப்போறாங்க நம்ம பசங்க !! அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் புது சீருடை!!

Asianet News Tamil  
Published : Feb 13, 2018, 07:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
புது யூனிபாஃர்மில்  ஜொலிக்கப்போறாங்க நம்ம பசங்க !! அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் புது சீருடை!!

சுருக்கம்

New uniform for tamil nadu school students

வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிக்கூடங்களில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு புது சீருடை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோடடையன் அறிவித்துள்ளார்.

2016-2017-ம் கல்வி ஆண்டில் பள்ளிக் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல் அடைவுத்திறன், கற்றல் கற்பித்தலில் புதிய உத்தியை பயன்படுத்துதல், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளில் ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் 96 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில்  நடைபெற்றது.

இந்த விழாவில் சிறந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கேடயங்களும், விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய 51 ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார்.  இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய  அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும்,  வேலை வாய்ப்பு பெறும் வகையில் இந்த புதிய பாடத்திட்டம் இருக்கும் என்றும் தெரிவித்தார்..

இதே போன்று அரசு பள்ளிக்கூட சீருடைகள் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகளுக்கு வருகிற கல்வி ஆண்டில் மாற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.

 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு நிறத்தில் சீருடைகளும், 6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை மற்றொரு நிறத்திலும், 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு வேறு ஒரு நிறத்திலும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்-மாணவிகளுக்கு இன்னொரு நிற சீருடைகளும் என்று 4 வகையாக மாற்றப்பட உள்ளது என தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் சீருடைகள் மாற்றப்படாமல் இருந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் புது யூனிபாஃர்ம் வழங்கப்படும் என்பதால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

BJP Plan: அண்ணாமலைக்கு ‘ரெஸ்ட்’ அல்ல... இது ஒரு பெரிய ‘புரமோஷன்’ - டெல்லி மேலிடத்தின் ரகசியத் திட்டம்!
விஜய் போட்டியிடும் தொகுதியில் முதல்வர் மார்னிங் வாக்; திமுக பயப்படவில்லை என நாடகமாடுகிறது - ஆதவ் அர்ஜுனா தாக்கு!