
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கட்டண உயர்வு தொடர்பாக திமுக நடத்திய ஆய்வு அறிகைகையை அளிக்கிறார்.
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டண உயர்வு அமலானது. அரசியல் கட்சியினர், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பின் எதிர்ப்புக்குப் பின் பேருந்துக் கட்டணத்தில் சிறிதளவு குறைப்பை தமிழக அசு அறிவித்துள்ளது.
இந்த கட்டணக் குறைப்பால் தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு தினசரி 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது..
ஆனால் தமிழக அரசின் கட்டணக் குறைப்பு பெயரளவில் செய்யப்பட்டிருக்கிறது என்று பொது மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் எதிர்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதே போன்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நேற்று தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன,
இந்நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்டசிகள் சார்பில் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது இதையடுத்து போக்குவரத்து கழக மேம்பாடு, பஸ் கட்டண உயர்வு தொடர்பாக திமுக நடத்திய இந்த ஆய்வு அறிக்கையை இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அளிக்கவுள்ளார்.
அப்போது பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் ஸ்டாலின் வலியுறுத்துவார் என தெரிகிறது.