மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு புதிய சிலை… இபிஎஸ், ஓபிஎஸ் திறந்து வைத்தனர்….

By Selvanayagam PFirst Published Nov 14, 2018, 10:39 AM IST
Highlights

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7 அடி உயர வெண்கல சிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். 

ஆனால் ஜெயலலிதாவின் சிலை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.  அக்கட்சி தொண்டர்களே சிலையைப் பார்த்து, யார் இது என்று கேட்கும் அளவிற்கு முகம் மாறுதல் அடைந்து காணப்பட்டதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

இதையடுத்து ஜெயலலிதாவின் புதிய சிலை உருவாக்கப்பட்டு வந்தது. இந்த சிலை முழு வடிவம் பெற்று, சென்னை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று காலை திறக்கப்பட்டது.

முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

click me!