உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு.. சட்டப் பேரவையில் சபாநாயகர் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 13, 2021, 2:49 PM IST
Highlights

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதன்படி அடுத்த 3 ஆண்டுகளுக்கு அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி செயல்படுவார எனவும் சபாநாயகர் அறிவித்தார். திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற  உறுப்பினராக இருந்துவருகிறார் உதயநிதி.  

சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்ததால் கட்சி சீனியர்களையே விஞ்சும் அளவுக்கு தான் போட்டியிட்ட தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அவர். அதேபோல தனது சட்டமன்ற  தொகுதியில் அன்றாடம் ஆய்வு செய்து மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, தொகுதி மேம்பாட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் மூலம் சிறந்த எம்எல்ஏ என்றும் தொகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். முன்னதாக புதிய அமைச்சரவையில் உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை, ஆனாலும் அவர் துடிப்புமிக்க சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் குறித்த விவரங்களை சட்டப்பேரவையில் சபாநாயகர் இன்று அறிவித்தார், அப்போது ஆண்ணாபல்கலை கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்படுவதாக கூறினார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அலுவல் சாரா உறுப்பினராக அவர் செயல்படுவார் என்றும் அப்பாவு அறிவித்தார். அதேபோல் பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!