எம்எல்ஏ வானதி சீனிவாசனின் மகன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..!

Published : Sep 13, 2021, 02:07 PM IST
எம்எல்ஏ வானதி சீனிவாசனின் மகன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து..  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..!

சுருக்கம்

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஸ் (22). நேற்று நள்ளிரவு கோவையில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக சென்று கொண்டிருந்தாா். அப்போது கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தின் வழியாக அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதியது.   

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஸ் (22). நேற்று நள்ளிரவு கோவையில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக சென்று கொண்டிருந்தாா். அப்போது கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தின் வழியாக அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதியது. 

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆதர்ஷ் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து தொடர்பாக தகவலறிந்து வந்த பாஜக நிர்வாகிகள் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆதர்சை மற்றொரு காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

உங்களால பலபேர் இறந்திருக்கிறார்கள்... புதுவை மாநாட்டில் புஸ்ஸி ஆனந்திடம் சீறிய பெண் காவல் அதிகாரி
அந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?