ஏழைகளுக்கும் தரமான கல்வி, மருத்துவம்  கிடைக்கணும்…. அதுக்குதான் கட்சி தொடங்குகிறேன்… கமல் அதிரடி!!

Asianet News Tamil  
Published : Feb 13, 2018, 10:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
ஏழைகளுக்கும் தரமான கல்வி, மருத்துவம்  கிடைக்கணும்…. அதுக்குதான் கட்சி தொடங்குகிறேன்… கமல் அதிரடி!!

சுருக்கம்

New party for Poor people get good eductiond and medical treatment

ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும், 3 தலைமுறைகளுக்கு பயன்படும் வகையில் கட்சி தொடங்கப் போவதாகவும் நடிகர் மமலஹாசன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். பின்னர் லெக்சிங்டன் நகரில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்தார். அப்போது தமிழர்கள் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்து பேசினார்.

அப்போது, நான் என் வேலைகளை விட்டு விட்டு கடமை செய்ய வந்து இருக்கிறேன். அதேபோல் நீங்களும் கொஞ்ச நேரம் நாட்டுக்காக ஒதுக்க வேண்டும். நான் வெறும் கலைஞனாக சாக மாட்டேன். உங்கள் பணியில் அது நிகழும். அதுதான் சரியான வழியாக இருக்கும். கலைஞனாக இருப்பது குறைவு அல்ல. ஆனால் எனக்கு அது போதவில்லை என தெரிவித்தார்..

அரசியல் கட்சி பெயர், கொடி போன்றவை வருகிற 21-ந்தேதி அறிவிக்க உள்ளதாகவும்,  உங்கள் பங்கும் அதில் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கமல்ர தெரிவித்தார்.  கட்சியில் சேரும்படி சொல்லவில்லை. அது உங்கள் இஷ்டம். ஆனால் இந்த அரசியல் யாரோ செய்கிறார்கள் அதில் நமக்கு என்ன வேலை என்று ஒதுங்கி இருக்கக் கூடாது என குறிப்பிட்டார்.

கொள்கைகள், திட்டங்கள் போன்றவை குறித்து  வருகிற 21-ந்தேதி மதுரையில் நடைபெறவுள்ள  பொதுக்கூட்டத்தில் பேசப்போவதாகவும் கமல் கூறினார்.

தமிழகத்தில் நிறைய விஷயங்களை மாற்ற வேண்டி உள்ளது. தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். தரமான கல்வியால்தான்  இந்தியா உயரும். தனியார் கையில் இருக்கும் மருத்துவத்தை மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும். நீர் வழித்தடங்களை மேம்படுத்த வேண்டும இவைதான் தனது லட்சியங்கள் என்றும் கமல் தெரிவித்தார்..

இதுபோன்ற அடிப்படை வசதிகளை 5 வருடத்தில் செய்து கொடுக்க முடியுமா? என்று தெரியவில்லை. ஆனாலும் அது முடியும் என்று நம்புகிறேன் என தெரிவித்த நடிகர் கமலஹாசன்  3 தலைமுறைகளுக்கு பயன்படும் சமுதாய கருவியாக இந்த கட்சி இருக்க வேண்டும் என்பது எனது ஆசை எனவும் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நள்ளிரவில் படுக்கையறைக்குள் புகுந்த அமெரிக்க ராணுவம்... பதறிய மதுரோவின் மனைவி..! பரபர சம்பவம்
பிரிந்து சென்றவர்கள் இணைந்தால் தான் அதிமுக வெற்றி பெறும் - அடித்து கூறும் ஓபிஎஸ்