#BREAKING தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்.. அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.!

Published : Aug 04, 2021, 12:12 PM ISTUpdated : Aug 04, 2021, 12:16 PM IST
#BREAKING தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்..  அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.!

சுருக்கம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டினைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இதே தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என திமுக முதலமைச்சர், முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடை விதித்து அவசர நிறைவேற்றியது. கதியில் சட்டம் ஒன்றை அதிமுக அரசு நிறைவேற்றியது. 

அதிமுக அரசின் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் கருத்துக்களை சார்பில் ஆணித்தரமாக தலைமை எடுத்து வழக்கறிஞர் வாதிட்டு, உரிய வைத்த போதிலும், இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களை சட்டம் நிறைவேற்றும் போது கூறவில்லை; விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்று கூறி, தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டினைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இதே தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது.

பொது நலன் மிக முக்கியம் என்பதால், உரிய விதிமுறைகள் மற்றும் தகுந்த காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, எவ்வித தாமதமுமின்றி, ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என  முதலமைச்சர் நேற்றையதினம் தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டிருக்கிறார். ஆகவே, முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay: காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை சீட்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..
Kalaignar Birthday: இங்க் பேனா முதல் மீன் குழம்பு வரை..! கருணாநிதி பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்.!