அந்தி வந்தால் நிலவு வரும்... இந்தி வந்தால் பிளவு வரும்... நெருப்பாக கொந்தளித்த சீமான்..!

By vinoth kumarFirst Published Aug 16, 2020, 1:49 PM IST
Highlights

தமிழக சட்டமன்ற நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் எனவும், தானும் போட்டியிடுவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் எனவும், தானும் போட்டியிடுவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்பு சீமான் மற்றும் அவரது கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என அந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தபடி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அந்தி வந்தால் நிலவு வருவதைப்போல் இந்தி வந்தால் பிளவு வரும். இந்தியை இந்தியா என்ற கட்டமைப்பிற்குள் திணிக்கும் முய்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியை போல் தமிழையும் நாடெங்கும் படிக்க சொல்வார்களா? என அவர் கேள்வி எழுப்பினார்.

புதிய கல்வி கொள்கை கொண்டுவந்தால் மாணவர்களுக்கு படிப்பின் மீது வெறுப்பு உண்டாகும் என்றும் கூறினார். வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் தானும் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். 

click me!