நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்... திமுகவுடன் கூட்டணியா..? கமல் ஹாசன் அதிரடி அறிவிப்பு!

Published : Aug 16, 2020, 09:34 AM ISTUpdated : Aug 16, 2020, 11:27 AM IST
நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்... திமுகவுடன் கூட்டணியா..? கமல் ஹாசன் அதிரடி அறிவிப்பு!

சுருக்கம்

திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேருவீர்களா என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பதில் அளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் காணொலி காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது நிர்வாகிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் கமல் ஹாசன் பதில் அளித்தார். அதில் ஒரு நிர்வாகி, தமிழகத்தில் திமுக, அதிமுகவை தாண்டி வெற்றி பெற முடியுமா? அல்லது அவர்களுடன் கூட்டணிக்கு செல்வீர்களா என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கமல் ஹாசன், “அரசியல் கட்சிகளை எல்லாம் சிந்தனையின் பிரதிபலிப்பாகத்தான் பார்க்க வேண்டும். அவர்களை பரம விரோதிகளாக ஏன் பார்க்க வேண்டும்? மக்கள் நீதி மய்யம் என்பதேகூட கூட்டணிதான். வெவ்வேறு துறைகளில் இருந்தவர்கள், வெவ்வேறு கட்சிகளில் இருந்தவர்கள்கூட விலகி இங்கே வந்திருக்கிறார்கள்.


திமுகவுடன் கூட்டணி என்றால் இல்லைதான். ஆனால், நாம் கூடிதாம் செய்ய வேண்டிய வேலை என்று இருந்தது என்றால் அதைச் செய்வோம். ஆனால், எதை வெல்வதற்காக நாம் கூடுகிறோம் என்பதையும் பார்க்க வேண்டும். அந்த இலக்கை அடைந்த பிறகு நம்முடைய இடத்துக்கு சென்றுவிட வேண்டும். மாற்றத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்யலாம். அப்படியென்றால் அதிமுக, திமுகவுடன் சேர்வீர்களா என்கிறார்கள். அவர்களோடு கூட்டணி சேர்ந்தால் என்ன ஏற்படும் என்பதை யோசித்துதான் தனிக்கட்சி தொடங்கினோம். தமிழகத்தில் ஒருத்தவரை ஒருத்தர் திட்டாத ஆட்சி முறையை உருவாக்க வேண்டும் என்னுடைய எண்ணம்.” என்று கமல்ஹாசன் பதில் அளித்தார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியல் வெளியீடு! CM Vijay-க்கு எத்தனையாவது இடம்?
Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்