தினகரனுக்கு சிக்கல் மேல் சிக்கல் - சுகேஷிடம் தேர்தல் தேதியை நிர்ணயக்கக் கோரியதாக புதிய வழக்கு!!

Asianet News Tamil  
Published : May 20, 2017, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
தினகரனுக்கு சிக்கல் மேல் சிக்கல் - சுகேஷிடம் தேர்தல் தேதியை நிர்ணயக்கக் கோரியதாக புதிய வழக்கு!!

சுருக்கம்

new case on ttv dinakaran

அந்நிய செலாவணி வழக்கை விட இரட்டை இலை லஞ்ச வழக்கு டிடிவி தினகரனை ஆக்டோபஸ் கரங்களைப் போல வளைத்து சுருட்டி முற்றாக ஆக்கிரமித்துள்ளது.

கொஞ்சம் கூட மூச்சு விடாதபடி வழக்கின் இறுக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்குக் கொண்டே போவதால் திணறி வருகிறார் டிடிவி தினகரன். திகார் சிறையில் திக் பிரமை பிடித்தது போல் இருக்கும் டிடிவி மற்றும் சுகேஷ் சந்திரசேகரிடம் டெல்லி போலீசார் அண்மையில் குரல் மாதிரியை பதிவு செய்திருந்தனர்.

இந்தச் சூழலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை நிர்ணயிக்க லஞ்சம் அளிக்க முயன்றதாக மேலும் ஒரு வழக்கு டிடிவி தினகரன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆம் தேதி தனக்கு ராசியான எண் என்பதால், மே 5 ஆம் தேதி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யுமாறு சுகேஷ் சந்திரசேகரை டிடிவி.தினகரன் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இவ்வழக்கில் மேலும் 5 பேரை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட டெல்லி காவல்துறையினர், சுகேஷ் சந்திரசேகரருக்கு ஜாமீன் வழங்கவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான வழக்கில் நாளை பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இரட்டை இலை லஞ்ச வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் தினகரனுக்கு இந்தப் புதிய வழக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

TVK Vijay Game: முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா?!
அரசியல் சாணக்கியரை வளைத்துப் போட்ட விஜய்..! தைலாபுரத்தில் முடிவாகும் தவெக, பாமக கூட்டணி..?