தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த புதிய முயற்சி... அது என்ன..? அண்ணாமலை சொன்ன அதிரடி தகவல்..!

Published : Oct 22, 2021, 08:14 PM IST
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த புதிய முயற்சி... அது என்ன..? அண்ணாமலை சொன்ன அதிரடி தகவல்..!

சுருக்கம்

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்லியது போல் மன்னிப்பு எல்லாம் என்னால் கேட்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

திருப்பூரில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் பல மாவட்டங்களிலும் கட்சிக்கென சொந்தமாக அலுவலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நவம்பர் 10 அன்று கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர் திருப்பூருக்கு வருகை தர உள்ளார். 
திருப்பூரில் இருந்தபடி ஈரோடு, திருநெல்வேலி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகங்களைக் காணொலிக் காட்சி மூலமாக ஜே.பி. நட்டா திறந்து வைக்க உள்ளார். மின்சார வாரியம் தொடர்பான புகாருக்கு, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்லியது போல் மன்னிப்பு எல்லாம் என்னால் கேட்க முடியாது. வேண்டுமென்றால், வழக்குத் தொடர்ந்தால் அதை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
முன்னதாக பாஜகவின் திருப்பூர் மாவட்ட புதிய அலுவலகத்தை கட்சியின் தேசியச் செயலாளர் அருண்சிங், மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!