மீண்டும் நிறுவப்பட்டது புதிய அம்பேத்கர் சிலை ! மின்னல் வேகத்தில் செயல்பட்ட தமிழக அரசு !!

By Selvanayagam PFirst Published Aug 26, 2019, 10:39 AM IST
Highlights

வேதாரண்யத்தில் நேற்று மாலை உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை உடனடியாக மீண்டும் நிறுவப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது. உடனடியாக  புதய சிலை வைக்கப்பட்டதற்கு பொது மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஜீப் ஒன்று தீவைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது.

பதட்டமான தொகுதியான வேதாரண்யம் காவல்நிலையத்தில் வெறும் மூன்று போலீசாரே இருந்துள்ளனர். அவர்களால் சிலையை உடைப்பதை பார்க்க முடிந்ததே தவிர தடுக்க முடியவில்லை. வன்முறையாளர்கள் ஒருமணி நேரம் நிதானமாக எந்தத்  தொந்தரவும் இல்லாமல் கலவரம் செய்தனர். 

அதே நேரத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் நாகை-நாகூர் மெயின்ரோடு வெளிப்பாளையம் வண்டிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் ஓ,எஸ்,மணியன் மற்றும்  நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டுள்ளனர்.

கலவரம் குறித்த தகவல் அறிந்ததும் பதற்பி போன நாகை எம்எல்ஏ  தமிமுன் அன்சாரி வேதாரண்யம் விரைந்து வந்து, அமைச்சர் ஓ.எஸ்.மணியனை சந்தித்து, நிலைமைகளை கேட்டறிந்ததோடு பதட்டத்தை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்தனர். அதன் முதல் கட்டமாக உடனடியாக புதிய  சிலையை முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அம்பேத்கர் நிலை இருந்த இடத்தில் உடனடியாக புதிய சிலை நிறுவப்பட்டது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி ஆகியோர் சிலை மடைக்கப்படவதை அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர்.

தற்போது புதிய சிலை அமைக்கபபட்டதையடுத்து அங்கு அமைதி திரும்பி பதற்றம் தணிந்துள்ளது. மேலும் வன்முயையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

click me!