கலவரத்தை அடக்க போலீஸ் இல்லை ! ஒரு மணி நேரம் புகுந்த விளையாடிய வன்முறையாளர்கள் ! வேதாரண்யம் வேதனை !!

Published : Aug 26, 2019, 09:10 AM IST
கலவரத்தை அடக்க போலீஸ் இல்லை ! ஒரு மணி நேரம் புகுந்த விளையாடிய வன்முறையாளர்கள் ! வேதாரண்யம் வேதனை !!

சுருக்கம்

வேதாரண்யத்தில் ஏற்பட்ட வன்முறையிம்போது அதை தடுக்க போதிய அளவு போலீஸ் அங்கு இல்லை என்றும், அங்கிருந்த ஒரு சில பெண் காவலர்கள் வன்முறையை வீடியோ எடுத்தபோது அவர்களிடம் சிலர் ஆபாசமாக நடந்து கொண்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஜீப் ஒன்று தீவைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது.
பதட்டமான தொகுதியான வேதாரண்யம் காவல்நிலையத்தில் வெறும் மூன்று போலீசாரே இருந்துள்ளனர். அவர்களால் சிலையை உடைப்பதை பார்க்க முடிந்ததே தவிர தடுக்க முடியவில்லை. வன்முறையாளர்கள் ஒருமணி நேரம் நிதானமாக எந்தத்  தொந்தரவும் இல்லாமல் கலவரம் செய்தனர். 

பெண் காவலர்கள் சிலை உடைப்பதை படம் பிடித்தபோது சிலை உடைப்பில் ஈடுபட்ட கலவரக்காரர்கள் சிலர் வேட்டியைத் தூக்கி ஆபாசமாக பேசி இதையும் படம் பிடிங்க என்று கூறியுள்ளனர்.  அப்போது அங்கிருந்த ஒரு சில போலீசார் கையறு நிலையிலேயே இருந்தனர். வேளாங்கண்ணி கோவில் திருவிழ நடைபெறுதால் அனைத்து பேலீசாரும் அங்கு காவலுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் ஓ,எஸ்,மணியன் மற்றும்  நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டுள்ளனர்.

கலவரம் குறித்த தகவல் அறிந்ததும் பதற்பி போன நாகை எம்எல்ஏ  தமிமுன் அன்சாரி வேதாரண்யம் விரைந்து வந்து, அமைச்சர் ஓ.எஸ்.மணியனை சந்தித்து, நிலைமைகளை கேட்டறிந்ததோடு பதட்டத்தை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!