திஹார் சிறையில் சுத்தம் செய்யப்படும் புதிய அறை !! சிதம்பரத்துக்கு ரெடியாகும் சிறை !!

By Selvanayagam PFirst Published Aug 26, 2019, 8:07 AM IST
Highlights

5 நாள் சிபிஐ காவல் முடிவடைந்திதையடுத்து இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இன்று டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக திஹார் ஜெயிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு சிறையில் அறை ஒன்று சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 

மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதித்திருக்கும் அந்நிய முதலீடு தொகையை விட கூடுதலாக 305  கோடி ரூபாயைப் ஐ.என்.எக்ஸ்.மீடியா நிறுவனம் பெற்றது. சட்டவிரோதமாக அந்நிறுவனம் பெறப்பட்ட அந்த முதலீட்டு தொகைக்கு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதித்தாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவரை கைது செய்து சிபிஐ விசாரித்து வருகிறது.  அந்த கஸ்டடி இன்று முடிவடைகிறது. 

இதையடுத்து சிதம்பரம் இன்று மாலை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். முடிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் திஹார் சிறைக்கு அனுப்பப்படலாம் என்று எதிர்பர்க்கப்படுகிறது. 

இந்நிலையில் திஹார் சிறை  வளாகத்திலுள்ள 7 ஆம் எண் கொண்ட அறையை சிறை நிர்வாகம் கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்டாலோ அல்லது சிபிஐ மீண்டும் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டாலோ திஹார் சிறையில் உள்ள அந்த அறையில் சிதம்பரம் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!