நாவால் கெட்ட நெல்லை கண்ணன் !! இப்ப எங்க இருக்கிறார் தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Jan 3, 2020, 8:55 AM IST
Highlights

பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலப்பாளையத்தில் கடந்த 29ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து குடியுரிமை பாது காப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய நெல்லை கண்ணன் பிரதமர்  மோடி மற்றும் உள்துறை அமைச்சர்  அமித் ஷா  ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். 

இதையடுத்து நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், நெல்லை கண்ணன் மீது மேலப்பாளை யம் போலீசார் 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த நிலையில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனி யார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை, போலீசார் அங்கு சென்று கைது செய்தனர். இதுபற்றி தகவல்அறிந்து மேலப்பாளையம் போலீசார் பெரம்பலூருக்கு சென்றனர்.
 
அவர்களிடம் நெல்லை கண்ணனை பெரம்பலூர் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை மேலப் பாளையம் போலீசார் நெல்லைக்கு அழைத்து  வந்தனர். நேற்று  நெல்லை அரசு மருத்துவமனைக்கு மிகப்பெரிய கிரிமினல் குற்றவாளியைப் போல பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை கொண்டு சென்றனர். 

அங்கு நெல்லை கண்ணனின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது.  மருத்துவ பரிசோதனை முடிந்தபிறகு நெல்லை கண்ணனை, நெல்லை குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். அவரை 13 ஆம் தேதி வரை  நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார், தொடர்ந்து நெல்லை கண்ணன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

click me!