கெத்து காட்டும் திமுக... அதிர்ச்சியில் அதிமுக... ஊரகத் தேர்தலில் அதிமுகவை முந்தியது திமுக!

By Asianet TamilFirst Published Jan 3, 2020, 7:17 AM IST
Highlights

வாக்கு எண்ணிக்கை விடியவிடிய நடைபெற்ற நிலையில், இன்று காலை 7 மணி நிலவரப்படி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2094 பதவிகளையும் அதிமுக கூட்டணி 1870 பதவிகளையும் வென்றன. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி  238 பதவிகளையும், அதிமுக கூட்டணி 236 பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் மாவட்ட கவுன்சிலர் பதவிகள், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விடிய விடிய நடந்துவரும் ஓட்டு எண்ணிக்கையில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என இரு அமைப்புகளிலும் திமுக கூட்டணி முந்தியது. 
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 9,624 ஊராட்சி தலைவர் பதவிகள், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு டிச. 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் நேற்று காலை 8  மணிக்கு தொடங்கியது.

4 பதவிகளுக்கு தேர்தல் நடந்ததால், ஓட்டுச் சீடுகள் ஒன்றாக கொட்டப்பட்டு, அதைப் பிரிக்கும் பணிகள் முதலின் நடைபெற்றன. பல்வேறு குளறுபடிகள், பிரச்சினைகள், சலசலப்புகளுக்கு இடையே வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றன. தொடக்கம் முதலே திமுகவும் அதிமுகவும் சமமான இடங்களில் முன்னிலை வகிக்கத் தொடங்கின. குறிப்பாக 5090 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக, அதிமுக மாறி மாறி முன்னிலை பெற்றன. தொடக்கத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுகவும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றன. பிறகு நேற்று மாலை இது உல்டாவாக மாறியது. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுகவும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுகவும் வெற்றி பெற்றன.

வாக்கு எண்ணிக்கை விடியவிடிய நடைபெற்ற நிலையில், இன்று காலை 7 மணி நிலவரப்படி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2094 பதவிகளையும் அதிமுக கூட்டணி 1870 பதவிகளையும் வென்றன. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி  238 பதவிகளையும், அதிமுக கூட்டணி 236 பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் மாவட்ட கவுன்சிலர் பதவிகள், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 
இன்னும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறாமல் தொடந்து நடைபெற்றுவருகின்றன. இன்று மாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

click me!