நாலாபுறமும் நெருக்கடி... தலைமறைவாக உள்ள நெல்லை கண்ணனை தூக்க போலீஸ் தீவிரம்..!

By vinoth kumarFirst Published Dec 31, 2019, 1:23 PM IST
Highlights

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரை ஒருமையில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், அமித் ஷா, பிரதமர் மோடியின் மூளையாக செயல்படுவதாக கூறினார். மேலும் அமித் ஷா தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வந்தே தீருவேன் என்று பேசியதை சுட்டிக்காட்டி பேசினார். இவர்களை நீங்கள் முடித்துவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் என வன்முறையை தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசினார்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிய நெல்லை கண்ணன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதையடுத்து, ஆளுநர் மாளிகையில் பாஜகவினர் புகார் மனு அளித்துள்ளனர். இதனால், தலைமறைவாக உள்ள நெல்லை கண்ணன் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.  

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லையில் குடியுரிமை மாநாடு நடைபெற்றது. அதில் எஸ்டிபிஐ கட்சியினருடன் நெல்லை கண்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 
இந்த நிகழ்ச்சியில் பேசிய நெல்லை கண்ணன்;- முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரை ஒருமையில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், அமித் ஷா, பிரதமர் மோடியின் மூளையாக செயல்படுவதாக கூறினார். மேலும் அமித் ஷா தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வந்தே தீருவேன் என்று பேசியதை சுட்டிக்காட்டி பேசினார். இவர்களை நீங்கள் முடித்துவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் என வன்முறையை தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசினார்.

இந்நிலையில், பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா டிஜிபியிடம் நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி புகார் அளித்துள்ளார். மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முஸ்லீம் பயங்கரவாதிகள் மத்தியில் மாண்புமிகு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்யத் தூண்டிப் பேசிய தேசவிரோத நெல்லை கண்ணனை எந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என இந்துக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும், பல்வேறு காவல் நிலையங்களில் நெல்லை கண்ணன் மீது புகார்கள் குவிந்து வருகின்றது.

 

இதனிடையே, நெல்லை கண்ணன் மீது ஆளுநர் மாளிகையில் பாஜகவினர் புகார் மனு அளித்துள்ளனர். இதனால், கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நெல்லை கண்ணன் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் தற்போது கர்நாடகாவில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

click me!