
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாகத்தான் மாணவிகள் தற்கொலை செய்துகொண்டார்களா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக கடந்த அனிதா, விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா, திருச்சியைச் சேர்ந்த சுபஶ்ரீ என்ற மாணவி நேற்று இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.
நீட் தேர்வால் மருத்துவக் கனவுகள் உடைந்ததால் நாடு முழுவதும் ஐந்து மாணவ மாணவியர் இதுவரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஹைதராபாத்தில் ஒரு மாணவியும் டெல்லியில் ஒரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு அனிதா, இந்த ஆண்டில் பிரதீபா, சுபஸ்ரீ என இளம் உயிர்களைத் தமிழகம் பறிகொடுத்துள்ளது. நேற்று ஒரு மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்து பின் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறுகையில், “நீட்டால் மட்டும்தான் மாணவர்கள் இறந்தார்களா என்பது கேள்விக்குறி. அவர்கள் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்.
நீட் தேர்வால்தான் இறந்தார்கள் என்பது சந்தேகம்தான். மாணவர்களைப் பயிற்றுவிக்க போதிய வசதிகள் இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.