மாணவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி..! சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் "NEET" கட்டாயம்..! தமிழக அரசு அதிரடி..!

By ezhil mozhiFirst Published May 31, 2019, 1:07 PM IST
Highlights

சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கும் இனி  நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

மாணவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி..! 

சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கும் இனி நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு முதலே சித்த மருத்துவ படிப்புக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் தான் சித்த, ஆயுர்வேத  படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் குறிப்பிடத்தக்கது. 

மருத்துவ படிப்பு சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப் பட்டதற்கு  தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது .வருடந்தோரும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும் மற்றொரு பக்கம் நீட் தேர்வுக்கான எதிர்ப்பு இருந்து கொண்டே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதுவும் இந்த ஆண்டே சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் அமைச்சே விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார் 

இதனால் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து உள்ள மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக மருத்துவ படிப்பில் சேருவதற்கு மட்டுமே நீட் தேர்வு கட்டாயம்  என இருந்த நிலையில், தற்போது கூடுதலாக சித்தா ஆயுர்வேத மருத்துவ படிப்புகளுக்கு நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தமிழக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!