தேர்தல் முடிந்ததும் வேலையை காட்டிய எடப்பாடி... இந்தா, ஆரம்பிச்சிட்டாருல ஆட்டத்தை..!

By vinoth kumarFirst Published May 31, 2019, 12:36 PM IST
Highlights

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு ஜூன் 3-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு ஜூன் 3-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பட்டிருந்தது. தேர்தல் முடியும் வரை சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில், தேர்தல் முடிந்ததும், 8 வழசிசாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

 

இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இம்மனு ஜூன் 3-ம் தேதி வசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் அன்புமணி கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

click me!