ஜெயலலிதாவின் ஆளுமையை புகழ்ந்து எடப்பாடியை வெறுப்பேற்றிய ஸ்டாலின், துரைமுருகன்... அடிமடியில் கைவைத்து அரசியல்..!

By vinoth kumarFirst Published Jan 8, 2020, 2:52 PM IST
Highlights

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 6-ம் தேதி கடைசி நாள் என்பதற்கும், 4-ம் தேதி நாங்கள் வழக்கு போட்டதற்கும் சம்பந்தம் இல்லை. நீட் எதிர்ப்பு கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. இந்த வி‌ஷயத்தில் அரசு துரோகம் செய்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினார். நாங்கள் துரோகம் செய்யவில்லை. நீட் தேர்வுக்கான விதையை விதைத்து மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தான் என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்.

ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர், அவர் உள்ளவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசியுள்ளார். ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகே நீட் நுழைவுத்தேர்வு தமிழகத்திற்கு வந்தது என்றார்.

தமிழக சட்டப்பேரவையில் 3-வது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. பின்னர், சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- அண்மையில் நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லி உச்சநீதிமன்றத்தில் அரசு மனு செய்ததாக செய்திகள் வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளதா? மனு ஏற்கப்பட்டு உள்ளதா? என்பதை அறிய விரும்புகிறேன். ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி மசோதாவை நிராகரிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் புதிய வழக்கால் என்ன நடந்து விடும்? நீங்கள் செய்வது சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகம் ஆகும்.

மேலும், முன்னால் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது நீட் தமிழகத்தில் தலைதூக்க வில்லை ஆனால் இப்போது நீட் தமிழகத்தில் உள்ளே நுழைந்ததும் யார் காரணம் அதற்கு நீங்கள்தான் காரணம் என்றார்.

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:- நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 6-ம் தேதி கடைசி நாள் என்பதற்கும், 4-ம் தேதி நாங்கள் வழக்கு போட்டதற்கும் சம்பந்தம் இல்லை. நீட் எதிர்ப்பு கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. இந்த வி‌ஷயத்தில் அரசு துரோகம் செய்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினார். நாங்கள் துரோகம் செய்யவில்லை. நீட் தேர்வுக்கான விதையை விதைத்து மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தான் என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். 

இதுதொடர்பாக துரைமுருகன் கூறுகையில்;- ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர், அவர் உள்ளவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகே நீட் நுழைவுத்தேர்வு தமிழகத்திற்கு வந்தது என திமுக பொருளாளர் துரைமுருகன் சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசியுள்ளார்.

click me!