மேலூரில் சாலையை ஸ்தம்பிக்க வைத்த கம்யூனிஸ்டுகள்...!! 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தது போலீஸ்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 8, 2020, 2:34 PM IST
Highlights

100 நாள்வேலையை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கை வலியுருத்தி மேலூர் பேருந்து நிலையம் அருகே கம்யூனிஸ்ட் மற்றும் அணைத்து தொழிலாளர் நலசங்கத்தினர் உள்ளிட்ட  பெண்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

மேலூரில் மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கையை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அணைத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் மற்றும் சாலைமறியல்கள் நடைபெற்றது,  அதில்  100க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

  

மதுரை மாவட்டம் மேலூரில்   மத்திய  அரசின்  மக்கள் தேசவிரோத கொள்கைகளை கண்டித்தும் தொழிலாளர் நலச் சட்டதிருத்தத்தை திரும்பபெற வேண்டியும், விலைவாசி உயர்வு மற்றும் பெட்ரோல் டீசல் உயர்வை கட்டுப்படுத்தவும் கிராமபுற 100 நாள்வேலையை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கை வலியுருத்தி மேலூர் பேருந்து நிலையம் அருகே கம்யூனிஸ்ட் மற்றும் அணைத்து தொழிலாளர் நலசங்கத்தினர் உள்ளிட்ட  பெண்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைதொடர்ந்து மேலூர் பேருந்து நிலையம் முன்பு  சாலையை மறித்து அமர்ந்து கோஷமிட்டும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியலால் பேருந்துகளை போலீசார் மாற்றுபாதையில் மாற்றினர். பின் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுகட்டாயமாக அவர்களை கைதுசெய்து தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  
 

click me!