அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக.. அண்ணாமலை ஆவேசம்..!

By vinoth kumarFirst Published Sep 12, 2021, 6:09 PM IST
Highlights

கடந்த வருடங்களில் நீட் தேர்வு காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்றும் சேலத்தில் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளைத் திமுக அரசு இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களில் நீட் தேர்வு காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்றும் சேலத்தில் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த  தனுஷ் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார். இதனையடுத்து, 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 3வது முறையும் தேர்வில் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சத்தில் தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது என அரசியல் தலைவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும், உச்ச நீதிமன்றம் பாராட்டும் நீட் தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளைத் திமுக அரசு நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரைப் பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு என்று பதிவிட்டுள்ளார். 

click me!