கொரோனா நெருக்கடியில் நீட் தேர்வு தேவையா..?? பிரதமர் கொஞ்சம் இரக்கம் காட்டலாம் என சுப்பிரமணியன் சாமி டுவிட்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 27, 2020, 10:22 AM IST
Highlights

அதன்படி கடந்த வாரம்  ஜே.இ.இ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது, ஆனாலும் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென மாணவர்கள் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது.

கொரோனா பரவல் சூழ்நிலையில் நீட், ஜெ.இ.இ தேர்வுகளை நடத்துவது பெரிய நகரங்களில் வசிக்கும் பணக்கார குழந்தைகளுக்கு மட்டுமே சாதகமாக அமையும் எனவும், இது குறித்து பிரதமர் இரக்கம் காட்டலாம் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் செப்டம்பர் மாதத்தில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

அதன்படி கடந்த வாரம்  ஜே.இ.இ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது, ஆனாலும் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென மாணவர்கள் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்வுகளை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது, இந்நிலையில் நேற்று தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியானது. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார், 

அதாவது, கொரோனா போன்ற இந்த சூழ்நிலையில் நீட்,ஜெ.இ.இ தேர்வுகளை நடத்துவது பெரிய நகரங்களில் வசிக்கும் பணக்கார குழந்தைகளுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்பதை அரசு உணர்ந்து கொள்ளவில்லையா? கடந்த ஐந்து மாதங்கள் ஏழை, நடுத்தர வர்க்கக் குழந்தைகளுக்கு இணையதள வசதியும், நூலகங்களுக்குச் சென்று படிக்கும் வசதியும் இல்லை, இந்த விஷயத்தில் பிரதமர் இரக்கம் காட்டலாம் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

 

click me!