உதயநிதி மீது நயன்தாரா புகார் கொடுக்க போகிறார்... போக்சோ சட்டத்தில் கைதாக போகிறார்... அமைச்சர் கேடிஆர் பரபரப்பு

By Ezhilarasan BabuFirst Published Nov 20, 2020, 4:27 PM IST
Highlights

உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய பிரச்சினை வருகிறது, அவர் மீது நயன்தாரா புகார் கொடுக்கப் போகிறார் உதயநிதி ஸ்டாலின் போக்சோ சட்டத்தில் உள்ளே போகப் போகிறார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய பிரச்சினை வர உள்ளது. அவர் மீது நடிகை நயன்தாரா புகார் கொடுக்கப் போகிறார். உதயநிதி ஸ்டாலின் போக்சோ சட்டத்தில் உள்ளே போகப் போகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2000 க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: 

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 281 பூத்துக்களில் கணக்கெடுத்து தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி பட்டியல் அனைத்து பகுதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளின் பணிகள், புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். அந்தந்த வாக்குச் சாவடி முகவர்கள் கிளைச் செயலாளர்கள் நிர்வாகிகள் இணைந்து பணியாற்ற வேண்டும். புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வாங்குவதற்க்கு  உதவி செய்தால் அவர்கள் நன்றி சொல்லக் கூடியவர்கள். நாம் செய்வதை நினைத்து பார்த்து நன்றி சொல்லக் கூடிய இனம் தமிழ் இனம் தான். இரட்டை இலை படம், அம்மா படம், எம்ஜீஆர் படம், இபிஎஸ் படம், ஓபிஸ் படம் போட்ட  அட்டையை குத்துக் கொண்டு வாக்கு சேகரிக்க செய்யுங்கள். 

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் புதிய வாக்காளர்கள் 28 ஆயிரம் ஓட்டை சேர்த்தால் இந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதிமுக விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய பிரச்சினை வருகிறது, அவர் மீது நயன்தாரா புகார் கொடுக்கப் போகிறார் உதயநிதி ஸ்டாலின் போக்சோ சட்டத்தில் உள்ளே போகப் போகிறார். ஆனால் என்னை பிடித்து உள்ளே போட்டு விடுவோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர். நான் நினைத்தால் இன்றே அவர்களை உள்ளே பிடித்து போட்டு விடுவேன். இன்று எங்களிடம் தான் அதிகாரம் உள்ளது. மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுகிற ஆள் நான் இல்லை. என்னுடைய பேச்சுக்கு பதில் சொல்ல முடியுமா எதிரெதிரே நின்று வெட்டவெளியில் பேசுவோம் வா என்று அழைப்பு விடுத்தார்.

 

நான் 10 வருடங்களாக மந்திரியாக உள்ளேன் அது தொண்டர்களாகிய உங்களால்தான் உங்களின் முயற்சியால் தான். அடித்தட்டு கட்சிக்காரர்களின் உழைப்பால் தான், நாங்கள் என்னை முன்னேற்றி விட்டீர்கள். நான் அன்றிருந்து கட்சிக்காக கோஷம் போட்டவன், கொடி பிடித்தவன், போஸ்ட்டர் ஓட்டியவன், நான் மிட்டா மிராசுதாரர் கிடையாது, வாக்குச்சாவடியில் வாழ்க்கையைத் தொலைத்தவன் இன்று மாவட்டச் செயலாளராக ஆகியிருக்கேன். உழைப்பவருக்கு மரியாதை கொடுக்கின்ற கட்சி அதிமுக, இங்கு உழைத்தவர்கள் முன்னேறலாம். திமுகவில் உழைத்தவர் முன்னேற முடியாது. அதிமுக உழைக்கிற கட்சி திமுக பிழைக்கிற கட்சி என்று அமைச்சர் தெரிவித்தார்.

click me!