கருணாஸ் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்! ஜாமீனில் வெளிவருவதை தடுக்க அதிரடி திட்டம்!

By vinoth kumarFirst Published Sep 28, 2018, 9:39 AM IST
Highlights

திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் தற்போதைக்கு சிறையில் இருந்து வெளியே வந்துவிடக்கூடாது என்கிற உத்தரவை தொடர்ந்து அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் தற்போதைக்கு சிறையில் இருந்து வெளியே வந்துவிடக்கூடாது என்கிற உத்தரவை தொடர்ந்து அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது சாதி ரீதியாக கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியது, கொலை மிரட்டல் என எட்டு பிரிவுகளில வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டுள்ளது.

 

போலீஸ் காவல் மறுக்கப்பட்ட நிலையில், வேலூர் சிறையில் இருக்கும் கருணாஸ் மீது ஐ.பி.எல் போட்டிகளின் போது ரசிகர்களை தாக்கியதாக மேலும் இரண்டு வழக்குகள் பதியப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகளில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாசை வரும் 4ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கருணாஸ் மீதான கொலை முயற்சி வழக்கை நீக்க நீதிபதி ஆணையிட்டார்.

 இதனை தொடர்ந்து கருணாஸ் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார். ஜாதிய மோதல்களை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் ஜாமீன் கோரி கருணாஸ் தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் கூட ஐ.பி.எல் போட்டிகளின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கில் கருணாஸ் ஜாமீன் பெற வேண்டும். அதுவரை அவர்சிறையில் இருந்து வெளியே வர முடியாது.

 

இதனிடையே ஐ.பி.எல் வழக்கிலும் கருணாஸ்க்கு ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில் அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தும் திட்டமும் போலீசாருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவை வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மிகவும் மோசமாக விமர்சித்தார். மேலும் குறிப்பிட்ட ஒரு ஜாதியையும் இழிவுபடுத்தும் வகையில் குரு பேசியதாக கூறப்பட்டது.

 

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட் காடுவெட்டி குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. உயர்நீதிமன்றத்திற்கு சென்று தேசிய பாதுகாப்பு சட்டத்தை காடுவெட்டி குரு உடைத்தார். ஆனாலும் மறுபடியும் குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து சிறையில் இருந்து வெளியே வரமுடியாமல் போலீசார் பார்த்துக் கொண்டனர்.  உடைக்க மீண்டும் மீண்டும் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்து கொண்டே இருந்தது. இதனால் சுமார் 1 வருடத்திற்கு மேல் குரு ஜெயிலில் இருந்தார். இதே பாணியில் கருணாஸ் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து போலீசார் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

click me!