அதிமுக - பாஜக கூட்டணி முறிவு விவகாரம்; ஒற்றை வரியில் பதில் அளித்த அண்ணாமலை

By Velmurugan s  |  First Published Sep 25, 2023, 8:01 PM IST

பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக தேசியத் தலைமை கருத்து தெரிவிக்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இன்று சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இன்று முதல் பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் கோவையில் இன்று நடைபெற்று வரும் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்தான கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது குறித்து ஒற்றை வரியில் பதில் அளிக்க வேண்டும் என்றால் நம்முடைய தேசிய தலைமை இது குறித்து பேசுவார்கள். 

நாடாளுமன்ற தேர்தல்.! தொகுதி பங்கீட்டை முதல் ஆளாக தொடங்கிய திமுக- ஐயூஎம்எல் கட்சியுடன் ஆலோசனை

ஏனென்றால் பாஜக ஒரு அகில இந்திய கட்சி தேசிய தலைவர்கள் உள்ளார்கள். அவர்களுடைய கவனத்திற்கு தற்பொழுது இது சென்றுள்ளது. எனவே அவர்கள் பேசுவார்கள் என தெரிவித்தார். அதிமுகவின் முக்கிய தலைவர்கள் குறித்து தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக மாவட்டச் செயலளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

click me!