"அதிமுக ஒரு ஆலமரம்… யாராலும் அதை வீழ்த்த முடியாது..." நடராஜன் ஆவேசம்

 
Published : Jan 18, 2017, 09:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
"அதிமுக ஒரு ஆலமரம்… யாராலும் அதை வீழ்த்த முடியாது..."  நடராஜன் ஆவேசம்

சுருக்கம்

கடைசித் தொண்டன் இருக்கும் வரை  அதிமுக என்ற ஆலமரத்தை யாராலும் வீழ்த்த முடியாது என நடராஜன் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் இறந்தததையடுத்து அதிமுகவையும், ஜெயலலிதாவையும் நாங்கள் தான் பாதுகாத்தோம் என்றும் எனவே அக்கட்சியில் எங்களது குடும்ப ஆட்சி தவிர்க்க முடியாது என சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்திருந்தார், மேலும் பா.ஜ.க. அதிமுக வை உடைக்க நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நடராஜன், செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது தீய சக்தி என்று ஜெயலலிதா யாரை கூறினாரோ அவரை 15 ஆண்டுகள் தமிழகத்தில் வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர் என தெரிவித்தார்.

ஆரிய வழியில் வந்தவர்கள் அதிமுக வை உடைத்துவிடலாம் என கனவு காண்கின்றனர். அவர்கள் கனவு பலிக்காது என்று கூறிய நடராஜன்,அதிமுக ஒரு ஆரமரம்,கடைசித் தொண்டன் இருக்கும் வரை அதை யாராலும் வீழ்த்த முடியாது என தெரிவித்தார்.

எம்ஜிஆர் கூறியபடி இன்றும் நமதே,நாளையும் நமதே,எதிர்காலமும் நமதே என்றும் நடராஜன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு