முதல்வர் வந்தால் தான் ஆச்சு - மீண்டும் ஆரம்பித்தது போராட்டம் , பதற்றம் போலீசார் குவிப்பு

 
Published : Jan 18, 2017, 03:27 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
முதல்வர் வந்தால் தான் ஆச்சு - மீண்டும் ஆரம்பித்தது போராட்டம் , பதற்றம் போலீசார் குவிப்பு

சுருக்கம்

பேச்சு வார்த்தை முடிந்தபின்னர் போராட்டக்காரர்கள் கோரிக்கை ஏற்கப்படும் , முதல்வர் இன்று காலை அறிக்கை விட உள்ளார் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். ஆனால் போராட்டக்குழுவினர் ஓபிஎஸ் அறிக்கை பார்த்துவிட்டுத்தான் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்ததால் இழுபறியாகி உள்ளது. 


ஆனாலும் போராட்டக்காரர்கள் அரசை சந்தேகப்படக்கூடாது உங்களின் கருத்தோடுதான் நாங்கள் ஒத்திசைந்துள்ளோம்  ஆகவே போராட்டத்தை கைவிடுங்கள் . நிச்சயம் அரசு நல்ல முடிவெடுக்கும். முதல்வர் அறிக்கை அளிப்பார் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.


பின்னர் போராட்டக்காரர்கள் குழு மெரினா சென்றது. அங்கு மைக் மூலம் பேச்சு வார்த்தை விபரங்களை தெரிவித்தனர். அவர்கள் பேசும் போதே இடையிடையே கரகோஷம் எழுப்பப்பட்டது. சில நேரம் முடியாது என்று இளைஞர்கள் எதிர்ப்பு கோஷமிட்டனர். 


போராட்டம் நடக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கில் போலீசாரும் கொஉவந்து குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழு சொன்னபோது போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் பலத்த ஆதரவை எழுப்பினர்.


அமைச்சர்கள் தரப்பு போராட்டத்தை கைவிட கேட்டுகொண்டது பற்றி கூறிய போது அதற்கு பலத்த எதிர்ப்பை தெரிவித்தனர். முதல்வர் அறிக்கை வந்தால் தான் போராட்டம் கைவிடப்படும் என்பதில் இளைஞர்கள் உறுதியாக உள்ளனர்.


முதல்வர் நேரில் வரவேண்டும் என்ற கோஷம் வைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் பலத்த கோஷத்தை எழுப்பினர் . இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. 


 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு