
பேச்சு வார்த்தை முடிந்தபின்னர் போராட்டக்காரர்கள் கோரிக்கை ஏற்கப்படும் , முதல்வர் இன்று காலை அறிக்கை விட உள்ளார் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். ஆனால் போராட்டக்குழுவினர் ஓபிஎஸ் அறிக்கை பார்த்துவிட்டுத்தான் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்ததால் இழுபறியாகி உள்ளது.
இது பற்றி அமைச்சர் ஜெயகுமார் பேச்சு வார்த்தைக்கு பின்னர் கூறியதாவது:
கலாச்சார சின்னத்தின் அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டு குறித்து மாண்புமிகு அம்மா அரசு நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது . ஜல்லிக்கட்டு எந்த விதத்திலும் தடைபட்டுவிடக்கூடாது எனபதற்காக அரசு சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எடுத்து சொல்லப்பட்டது.
அவர்களும் திருப்தி தெரிவித்தார்கள், ஆனாலும் செக்ஷன் 22 , 27 அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை சொன்னார்கள். 50 எம்பிக்கள் கொண்டு முடிந்த அளவுக்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்படும் என்பதையும் , ஜனாதிபதியை சந்தித்து அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்பதையும் ஏற்று கொண்டார்கள்.
அமைச்சர் பாண்டியராஜன்:
போராடிகொண்டிருக்கிற இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். முதல்வர் , சின்னம்மா அறிக்கை மிகவும் தெளிவாக உள்ளது. போராட்டக்காரர்கள் கலாச்சாரம் அழிக்கப்படுகிறது. அதே உணர்வு எங்களுக்கும் உள்ளது. பாராளுமன்றம் கூடும் நாட்களுக்குள் பிரதமர் , ஜனாதிபதி அளவில் அழுத்தம் தருவது. இருக்கிற நிலைமைகளை பேசி முதல்வர் விரைவில் அறிக்கை விட உள்ளார்.
செக்ஷன் 27 நில் காளையை சேர்த்து நடக்க வைப்பது. அவசர சட்டம் கொண்டு வர எல்லா வகையிலும் போராடுவோம். கண்டிப்பாக இருக்கிற உரிமையை மீட்டெடுப்போம். வெகு விரைவில் அதை கொண்டுவர எல்லா விதமான சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சொல்லி கொள்கிறேன். இதை ஏற்று இளைஞர்கள் போராட்டத்தை முடித்து கொள்ள வேண்டும்
அலங்கா நல்லூரில் கைது செய்யப்பட்டவர்கள் நிலை
அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள்
போராட்ட குழுவினர் கூறியதாவது:
எல்லா மாவட்டங்களிலும் போராட்டம் நடக்கிறது எல்லா மாவட்டங்களிலும் நாங்கள் ரெப்ரெசண்டேடிவ் கிடையாது. ஆனால் கோரிக்கைகள் அனைத்தும் பொதுவானது. ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது செக்ஷன் 22 வில் சேர்த்தார்கள். ஆனால் பிசிஏ செக்ஷன் 27 ல் சேர்க்க வேண்டும் . அப்படி செய்தால் பிரச்சனை இல்லை.
சகோதர சகோதரிகள் போராட்டம் நடத்திய போது அவர்கள் மீது நடத்திய தடியடி நடத்தி கைது செய்தனர். அவர்கள் அனைவர் மீதும் எஃப் ஐ ஆர் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். பீட்டா தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம் பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
இது குறித்து முதலமைச்சர் வைக்கின்ற அறிக்கை பொறுத்து தான் போராட்டம் முடிவுக்கு வரும் . அவரது அறிக்கை பொறுத்து தான் போராட்டம் முடியுமா? தொடருமா? என்பது தெரியவரும். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவால் முடியும் போது உங்களால் முடியாதா? ஆகவே முதலமைச்சரிடம் கேட்பது நல்ல முடிவை எடுங்கள்.
அமைச்சர் பாண்டியராஜன் மீண்டும் அவர்களிடம் போராட்டத்தை கைவிட வேண்டுகோள் வைத்தார்:
முதல்வர் எங்களை பேச்சு வார்த்தைக்கு அனுப்பி உள்ளார். 24 மாணி நேரத்தில் அறிக்கையை ரெடி பண்ணி முதல்வர் என்பதால் சட்டக்குழுவுக்கு அனுப்பித்தான் கொடுக்க முடியும். எங்களை நம்புங்கள் , இதை நீங்கள் மதித்து போராட்டத்தை கைவிட்டு செல்வது நல்லது.
சந்தேகப்பட்டு இருப்பது சரியாக இருக்காது. ஆகவே போராட்டத்தை கைவிட்டு செல்லுங்கள். பேச்சுவா வார்த்தையில் உள்ள அம்சங்களை உடனாடியாக நடத்துவோம். இவ்வாறு தெரிவித்தனர். அதற்கு போராட்ட குழுவினர் ஒத்துகொள்ளவில்லை.
ஆகவே பேச்சுவார்த்தை முதல்வர் அறிக்கையை அடுத்தே முடிவுக்கு வரும் என தெரிகிறது.