
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த கேள்விக்கு, நடராஜன் பரபரப்பாக பதிலளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஓ.பன்னீர் செல்வமும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், சந்தேகம் எழுப்பி வருகிறார்களே? 75 நாட்கள் என்னதான் நடந்தது? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு நடராஜன், விரிவாக பதிலளித்தார்.
அதில், ஜெயலலிதா மரணத்தில் மர்மமும இல்லை. ஜெயலலிதாவுக்கு லேசாக மயக்கம் இருந்துள்ளது. பின்னர் அவர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அப்போலோ மருத்துவமனை ரிப்போர்ட், தினமும் ஜெயலலிதாவை சகோதரியாக மதிக்கும் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போலோ ரெட்டி மூலமும், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மூலமும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த ரிப்போர்ட் பிரதமருக்கு அனுப்பப்பட்டது.
அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், வெளிநாட்டு மருத்துவர் எங்கள் பேச்சை கேட்பவர் அல்ல. ஆனால் அவர், நான் இருந்தால் எந்த வகையில் சிகிச்சை அளித்திருப்பார்களோ அதே முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று நடராஜன் தெரிவித்தார்.