Kamal Haasan: ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? கொதிக்கும் கமல்..!

By vinoth kumarFirst Published Dec 10, 2021, 1:58 PM IST
Highlights

 அரசுப் பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக் கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன.

போக்குவரத்து துறையில் இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

குளச்சலில் மீன் விற்பனை செய்யும் பெண் செல்வமேரி அம்மாள் என்பவரை அரசு பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட சம்பவமும், இது தொடர்பாக அவர் ஆதங்கப்படும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த அரசு பஸ் நடத்துநர் உட்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், அதேபோன்று மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நாகர்கோவில் - திருநெல்வேலி பஸ்சில் குறவர் குடும்பம் ஒன்று நேற்று பயணம் செய்தது. அப்போது, பேருந்தில் சத்தமிட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் முகம்சுழித்த நிலையில் அவர்களை இறக்கி விட  நடத்துநரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் அவர்களை  நடத்துநர் கீழே இறக்கி விட்டு அவரது உடமையையும் தூக்கி எறிந்துள்ளார். 

இந்த சம்பவத்தை வெளியே நின்று கொண்டிருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாது.  இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவித்ததையடுத்து ஓட்டுனர்‌ மற்றும்‌ நடத்துனரை பணிநீக்கம்‌ செய்து போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம் மரியாதை காட்டாத ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். 

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில்;- அரசுப் பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக் கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன.

ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம் மரியாதை காட்டாத ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி செய்யவேண்டும். (2/2)

— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial)

ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம் மரியாதை காட்டாத ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

click me!