“புல்லட் ரெயிலை எதிர்ப்பவர்கள் மாட்டுவண்டியில போங்க, நாங்க கவலைப்படமாட்டோம்”... காங்கிரஸை வெறுப்பேற்றிய மோடி

First Published Dec 3, 2017, 6:14 PM IST
Highlights
Narendra Modi in Gujarat PM slams Congress says those opposing bullet train should travel on bullock carts


அகமதாபாத்-மும்பை இடையே செயல்படுத்தப்படும் புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள்(காங்கிரஸ்) மாட்டுவண்டியில்தான் செல்ல வேண்டும், நாங்கள் கவலைப்படமாட்டோம் என்று பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசினார்.

குஜராத் மாநிலத்தில் வரும் 9, 14 தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறஉள்ளது. இதனால், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து, காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர். கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜனதா இந்த முறையும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் அனைவரும் குஜராத் மாநிலம் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார்கள்.

இந்நிலையில், பாரூச் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொ  ண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது-

அகமாதாபாத்,மும்பை இடையிலான ரூ.1.10லட்சம் கோடி மதிப்பிலான புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள்(காங்கிரஸ்) பற்றி எங்களுக்கு கவலையில்லை. அவர்கள் மாட்டுவண்டியில் செல்லட்டும். இந்த திட்டம் ஜப்பான் அரசின் கூட்டுடன், ஏற்கத்தக்க விலையில் செயல்படுத்தப்படுகிறது.

இதை புல்லட் ரெயில் திட்டத்தை செயல்படுத்த காங்கிரஸ் அரசும் முயற்சித்தது. ஆனால், திட்டத்துக்கு ஒப்பந்தம் செய்யமுடியவில்லை. இப்போது நாங்கள் செயல்படுத்த முயற்சிக்கும் போது, எங்களை எதிர்க்கிறது.

குஜராத்தில் புல்லட் ரெயில்திட்டத்தை செயல்படுத்தும் போது, மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். நினைத்துப் பாருங்கள், எத்தனை ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் தெரியுமா.

புல்லட் ரெயில் திட்டத்துக்கு சிமெண்ட், இரும்பு கம்பிகள் எல்லாம் எங்கு வாங்குவார்கள் ஜப்பான் நிறுவனத்தார் இந்திய நிறுவனங்களிடம் இருந்துதானே வாங்க முடியும். இது மிகப்பெரிய ஒப்பந்தம்  என்பதை மறந்துவிடாதீர்கள்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதே புல்லட் ரெயில் திட்டத்தை செயல்படுத்த எண்ணி தோல்வி அடைந்தது. அந்த விரக்தியில் காங்கிரஸ் கட்சி எங்களை கூறை கூறுகிறது.

நேரு, இந்திரா காந்தி குடும்பத்தினர் தங்களை குஜராத்தை சேர்ந்தவர்கள் என வெளியே கூறுகிறார்கள். ஆனால், குஜராத் மாநிலத்துக்காக அவர்கள் என்ன நல்லது செய்தார்கள். கடலில் சிறிய அளவிலான கப்பல் சேவையை நாங்கள்

தொ டங்கிவைத்தோம், அதை அவர்கள் சிந்தித்து பார்த்தார்களா

காங்கிரஸ் கட்சி கிராமங்கள், நகரங்கள், மாநிலங்களுக்கு இடையேயும், மக்களுக்கு இடையேயும், கல்வி அறிவு பெற்றவர்கள் பெறாதவர்கள் இடையேயும் பிரிவினையை ஏற்படுத்துகிறது.

சாதிரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிரிவினையை காங்கிரஸ் கட்சி உண்டாக்கி இருக்கிறது. ஆனால், மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சியில் அமர்்ந்தபின், இந்த பிரிவினைகள் இல்லை.நான்குஜராத் முதல்வராக இருந்தபோது, ஒ  ரு நாள் கூட அவர்கள் குஜராத் மாநிலத்தை புண்படுத்தி பேசமாட்டார்கள்.

குஜராத் மாநிலத்தில் கட்ச், பகரூச் பகுதியில் ஏராளமான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பா.ஜனதா ஆட்சியில் அங்குதான் அதிகமான வளர்ச்சி இருந்தது.

இவ்வாறு அவர் பேசினார். 

click me!