தமிழிசையை ஆளுநராக்கியது தவறு... கதறும் காங்கிரஸ் முதல்வர்..!

By Thiraviaraj RMFirst Published Sep 2, 2019, 3:25 PM IST
Highlights

தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக நியமிக்கப்பட்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
 

தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக நியமிக்கப்பட்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு மாநில கவர்னராக, துணைநிலை ஆளுநராக நியமிக்கப்படுபவர்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது என ஏற்கனவே சர்க்காரியா கமி‌ஷனில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் சிலரை கவர்னராக நியமனம் செய்தோம். இல்லை என்று கூறவில்லை. ஆனால், மத்திய பா.ஜனதா அரசு அப்பட்டமாக பா.ஜனதா நிர்வாகிகளை மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை கவர்னர்களாக, துணைநிலை ஆளுநர்களாக நியமித்து வருகிறது.

இது, இந்திய ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. இதனால் மத்திய அரசின் கைப்பாவையாக கவர்னர்கள், துணை நிலை ஆளுநர்கள் செயல்படுவார்கள். இதைத்தான் கூடாது என சர்க்காரியா கமி‌ஷன் கூறியுள்ளது. இருப்பினும் தெலுங்கானா கவர்னராக பதவியேற்கும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என அவர் தெரிவித்தார்.

click me!