விஞ்ஞானிகளையே அதிரவைத்த மோடி...!!! லடாக் பள்ளத்தாக்கு ரகசியங்களை உடைத்தார்...!!

By Asianet TamilFirst Published Sep 2, 2019, 2:01 PM IST
Highlights

ரோடியோலா மூலிகைக்கு நோய் எதிர்ப்பு சக்தி, கதிர் வீச்சுக்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் ஆற்றல், இழந்த நினைவாற்றலை மீட்பது. புற்றுநோயை அழிப்பது போன்ற அபார மருத்துவ குணங்களை உண்டு  என அத்தாவரத்தின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார் மோடி. 


பிரதமர் மோடி சுட்டிகாட்டியுள்ள ரோடியோலா என்ற தாவரம் இந்திய பாதுகாப்புத்துறைக்கு பெருமளவில் உதவும் என்பதால் அதை அதிகளவில் பயிரிட மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இதுதான் இராமாயணத்தில் குறிப்பிடப்படும் சஞ்சீவி மூலிகை என்றும் கூறப்படுகிறது. 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு , காஷ்மீர் மற்றும் லடாக்கின் சிறப்புகள் குறித்து மத்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி நிறுவ அதிகாரிகள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் காஷ்மீர் இந்தியாவின் இயற்கை வளமிக்க அழகிய பகுதிகளில் ஒன்று  என்றார். தொடர்ந்து உரையாற்றிய அவர். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு  காஷ்மீர் மற்றும் லடாக்  மலைப்பகுதி மற்றும் அதன் பள்ளத்தாக்குகளில் அதிக அளவில் மூலிகை தாவரங்கள் வளர்கின்றன 

அவைகள் சிறந்த மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் என்றார். அங்குள்ள அனைத்து தாவரங்களிலும் ரோடியோலா என்ற தாவரமே சிறந்த தாவரமாகக் கருதப்படுகிறது என்றார். அதிசிறப்பு மிக்க இந்த தாவரம் , சுமார் 18 ஆயிரம் அடி உயரம் கொண்ட ஆக்ஸிஜன் குறைவாக உள்ள லடாக் மலைப் பகுதிகளில் மட்டுமே  அதிகளவில்  வளர்கிறது என்றார். இந்த ரோடியோலா மூலிகைக்கு நோய் எதிர்ப்பு சக்தி, கதிர் வீச்சுக்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் ஆற்றல், இழந்த நினைவாற்றலை மீட்பது. புற்றுநோயை அழிப்பது போன்ற அபார மருத்துவ குணங்களை உண்டு  என அத்தாவரத்தின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார் மோடி. அவரது உரையைக்கேட்ட மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள். ரோடியோலா தாவரத்தை அதிக அளவில் பயிரிடவும், பாதுகாப்புத்துறைக்கு அந்த மூலிகையை பயன்படுத்துவதுடன், வெளிநாடுகளுக்கு அதை ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

எனவே லடாக் மலைப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் உதவியுடன் ரோடியோலா தாவரத்தை அதிக அளவில் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லாடாக பகுதி விவசாயிகள், ரோடியோலா பல நோய்களை குணப்படுத்தும் முக்கிய மூலிகையாக உள்ளது. இராமயணத்தில் அனுமன் கொண்டு வந்ததாக சொல்லப்படும் சஞ்சீவி மூலிகையே இந்த ரோடியோலா தான் என தெரிவிக்கின்றனர். பிரதமரின் உரையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மூலிகையை பாதுகாக்க ஆராய்ச்சி நிறுவனம் களம் இறங்கியுள்ளது குறிப்பிட தக்கது. 


 

click me!