74 வயசாகிடுச்சு... திஹார் ஜெயில்ல அடைச்சிடாதீங்க... கெஞ்சி கூத்தாடும் ப.சிதம்பரம்..!

Published : Sep 02, 2019, 01:59 PM IST
74 வயசாகிடுச்சு... திஹார் ஜெயில்ல அடைச்சிடாதீங்க... கெஞ்சி கூத்தாடும் ப.சிதம்பரம்..!

சுருக்கம்

வயது 74 ஆகிறது. தயவு செய்து திஹார் ஜெயிலுக்கு அனுப்பி விடாதீர்கள் என உச்சநீதி மன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளார். 

வயது 74 ஆகிறது. தயவு செய்து திஹார் ஜெயிலுக்கு அனுப்பி விடாதீர்கள் என உச்சநீதி மன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளார். 

வீட்டுக்காவலுக்கு அனுப்புங்கள் ஒத்துழைப்பு தருகிறேன்.  எனக் கேட்டுக் கொண்டுள்ளார் அவரது சிபிஐ காவல் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  அமலாக்கத்துறை வழக்கில் முன் ஜாமின் மனு விசாரணைக்கு வர முன்ன்று நாட்கள் உள்ளதால் எனக்கு சலுகை தாருங்கள் என ப.சிதம்பரம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில் ப.சிதம்பரம் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இன்றைய விசாரணையின்போது ப.சிதம்பரத்தை மேலும் சில நாட்கள் காவலில் எடுக்க சிபிஐ கோரிக்கை வைத்தது.

இன்றைய விசாரணைக்கு பின் ப.சிதம்பரம் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் அவர் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 5ம் தேதி வரை அவரது சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. திஹார் ஜெயிலில் அடைக்க வேண்டாம் என போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை