
திமுக-பாஜக மோதல்
திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் பாஜக- திமுக இடையே வார்த்தைப்போர் அதிகரித்துள்ளது. திமுகவினர் பாஜகவையும், பாஜகவினர் திமுகவையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள் இந்த இந்தநிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர் தாமோ.அன்பரசன் பேசுகையில், 'உங்கள் டாடி மோடியிடம் சொல்லி மேகதாது அணை கட்டும் பணியை நிறுத்துங்கள். பின்னர் வந்து பேசுங்கள். அதை தடுத்துவிட்டு இங்கு வந்து பாஜக அரசியல் செய்ய வேண்டும் என கூறினார். பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தொடர்பாக பாஜக சார்பாக தலைமைச்செயலகம் முற்றுகை போராட்டத்தின்போது போலீசார் அண்ணாமலையை தேடிய போது ஆட்டோவில் ஏறி ஓடிவிட்டார். ஒருவாரம் சிறையில் அடைத்தால் கட்சியே வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள். நாங்கள் எல்லாம் சிறை என்றால் பெட்டியை தூக்கிக் கொண்டு போய்விடுவோம். இவர்கள் பெயரைக்கூட என் தகுதிக்கு சொல்வதில்லை. ரொம்ப ஆட்டம் போட்டால் வாலை ஒட்ட அறுத்து சுண்ணாம்பு போட்டுவிடுவோம்.' எனக் கடுமையாகப் பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் பாஜகவினர் இதற்க்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
அஞ்சி நடுங்கும் திமுக
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை அழித்து விடுவேன் என்று பல்லாவரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மிரட்டல் விடுத்தார் அமைச்சர் தா மோ அன்பரசன் குன்றத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜனோ, அண்ணாமலையின் கரங்கள் இருக்காது என்று ஓலமிடுவதோடு, அவரின் பிறப்பு குறித்து தரக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மொத்தத்தில் தி மு க கும்பல் அண்ணாமலையை கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருக்கிறது. அண்ணாமலை அவர்களின் தி மு க மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டு பயத்தில் உளறி கொண்டு வன்முறையை தூண்டும் விதத்தில் பேசும் தி மு கவினரை, அக்கட்சியின் தலைவராக கண்டிக்காவிட்டாலும், தமிழகத்தின் முதல்வராக திரு. மு க ஸ்டாலின் அவர்கள் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவரின் கடமை அவரின் மௌனம் நீடித்தால் இந்த மிரட்டல்களை அவர் ஆதரிக்கிறார் என்பதோடு அவரின் சம்மதத்தின் பேரிலேயே இந்த மிரட்டல்கள் நடைபெறுகின்றன என்றே பொருள் தரும்.சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வர் சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு துணை போகலாமா? என்று மக்கள் கேட்கிறார்கள். நிர்வாகமின்மையின் காரணமாக மாநிலத்தின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க ஆளும் கட்சியினரே முயற்சிப்பது விந்தையாக உள்ளது. தமிழக காவல்துறை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் மீதான கொலை மிரட்டல்களை விடுத்த அமைச்சர் அன்பரசன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்