காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்ற விஜயதாரணி தொகுதி காலியானதாக அறிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பொன்முடி தொகுதி காலியானதாக அறிவிக்க தாமதம் ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
பதவியை இழந்த பொன்முடி
சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதனையடுத்து ஒரு மாத காலத்திற்குள் விழுப்புரம் சிறையில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சரண்டைவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பொன்முடி தொடர்ந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் 4 வாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தேர்தலை சந்திக்க பயமா.?
இந்த சூழ்நிலையில் பொன்முடி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் திருக்கோவிலூர் தொகுதி காலியானாதாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் இது தொடர்பாக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள சமூகவலை தள பதவில் இரு நாட்களுக்கு முன்னர் விஜயதரணி ராஜினாமா செய்த விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில்,
இரு நாட்களுக்கு முன்னர் விஜயதரணி ராஜினாமா செய்த விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக உள்ளதாக, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் காலியான திருக்கோவிலூர் தொகுதியை 'காலி' என அறிவிக்க தாமதம், தயக்கம் ஏன்?…
— Narayanan Thirupathy (@narayanantbjp)
இரண்டு மாதங்களுக்கு முன்னர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் காலியான திருக்கோவிலூர் தொகுதியை 'காலி' என அறிவிக்க தாமதம், தயக்கம் ஏன்? மீண்டும் தொகுதியில் தலை காட்ட தி மு க வுக்கு பயமா? அல்லது பாஜக வின் A.G. சம்பத் அவர்களின் மீதான அச்சமா? தைரியமிருந்தால், திராணியிருந்தால் பொன்முடி மற்றும் மு.க.ஸ்டாலின் தேர்தலை சந்திக்கவும் என நாரயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்