தருமபுர ஆதீனத்திற்கு பல்லாக்கு தூக்க தடை... நாராயணன் திருப்பதி கண்டனம்!!

Published : May 04, 2022, 05:05 PM IST
தருமபுர ஆதீனத்திற்கு பல்லாக்கு தூக்க தடை... நாராயணன் திருப்பதி கண்டனம்!!

சுருக்கம்

களவாணி பயல்களின் கோரிக்கையை ஏற்று பல்லக்கு தூக்க தடை விதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

களவாணி பயல்களின் கோரிக்கையை ஏற்று பல்லக்கு தூக்க தடை விதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடத்தில் ஆண்டுதோறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் சுமந்து செல்வார்கள். பக்தர்களை தேடிச் சென்று அருள் ஆசி வழங்குவார் ஆதினம்.  பல நூற்றாண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆனால், மனிதர்களை மனிதர்களே சுமக்கலாமா என்று திராவிடர் கழகம்  எதிர்ப்பு தெரிவித்ததால் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்திருக்கிறார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் நாராயணன் திருப்பதி, தருமபுரி ஆதீன பட்டினப்பிரவேச விவகாரத்தில் மீண்டும் திமுக அரசு தவறிழைக்கிறது. சில களவாணி பயல்களின் கோரிக்கையை ஏற்று பல்லக்கு தூக்க தடை விதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சில புறம்போக்குகள் இதை தடை செய்ய வேண்டும் என்று சொல்வதற்காக, பல நூற்றாண்டுகளாக கடைபிடித்து வரும்  உன்னதமான ஆன்மீக விவகாரங்களில் அரசு தலையிடுவது முறையல்ல. மதசார்பற்ற அரசின் கடமை. மத நம்பிக்கைகளில் தலையிடாமல் இருக்க வேண்டியதே  தமிழக அரசு உடனடியாக தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்.

களவாணி என்பதும் புறம்போக்கு என்பதும் அநாகரீகமான சொற்கள் அல்ல, அவை சட்ட சபை குறிப்புகளிலேயே உள்ளன என்று முன்னாள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த வார்தைகளை நான் பயன்படுத்தியது குறித்து யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் தர்மபுர ஆதின பல்லக்கை அண்ணாமலை சுமப்பாராம்! பாஜக தலைவர் பல்லக்கு தூக்கியாகிறார்! சுயமரியாதை இல்லாதவர். இவரைப் போன்றவருக்குதான் சுயமரியாதை இயக்கம் கண்டார் பெரியார் என்று மார்க்சிஸ்ட் அருணன் விமர்சனம் செய்திருப்பதற்கு,  2 சீட்டுக்கு 10 கோடிக்கு கட்சியை அடமானம் வைத்த கம்மிகள் சுயமரியாதை குறித்து பேசுவதா? என்று கேள்வி எழுப்பினார். 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி