மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ? திமுக அரசு இதுதான் செய்யும்.. போட்டு உடைத்த துரை வையாபுரி !

Published : May 04, 2022, 05:05 PM ISTUpdated : May 04, 2022, 05:06 PM IST
மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ? திமுக அரசு இதுதான் செய்யும்.. போட்டு உடைத்த  துரை வையாபுரி !

சுருக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அச்சம் ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு இருப்பதாக மதிமுக கட்சியின் தலைமை நிலைய பொதுச்செயலாளர் துரை வையாபுரி  தூத்துக்குடியில் பேட்டி அளித்துள்ளார்.

தூத்துக்குடியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை நிலைய செயலாளர் துரை வையாபுரி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் மின்வெட்டு நிலவுவதற்கு மத்திய அரசின் தவறான கொள்கை முடிவு தான் காரணம் தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சனை இன்னும் மூன்று வாரங்களில் சரியாக வாய்ப்பு உள்ளது. 

தமிழக ஆளுநர் 7 பேர் விடுதலை, நீட் உள்ளிட்ட மசோதாக்களை கையெழுத்திடாமல் ஆளுநர் தொடர்ந்து ஜனநாயக படுகொலை செய்து வருகிறார்.  அவர் தமிழக ஆளுநராக செயல்படவில்லை. பாஜகவின் ஆளுநராக செயல்படுகிறார். தமிழக அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் வரவேண்டிய சுமார் 20 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை உள்ளது. எனவேதான், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. வரும் நான்கு ஆண்டுகளில் தமிழக முதல்வர் சிறந்த முதல்வராக முத்திரை பதிப்பார் மிகச் சிறந்த ஆட்சியை செயல்படுத்துவார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள கிராம மக்கள் தன்னை சந்தித்த போது,  மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற அச்சம் இருப்பதாக தன்னிடம் தெரிவித்தார்கள். ஸ்டெர்லைட் ஆலை நான்காண்டுகளாக செயல்படாததால் காற்று, நிலம், நீர் ஆகியவை மாசுபடாமல் தாங்கள் நன்றாக இருப்பதாக தன்னை சந்தித்தபோது மக்கள் கூறினார்கள்.அப்போது அவர்களிடம் தமிழக அரசு உறுதியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்காது என்று உறுதி அளித்தேன்’ ஏன்னு கூறினார்.

இதையும் படிங்க : “உயிரே போனாலும் நடத்திக்காட்டுவோம்..!” ஸ்டாலின் அரசுக்கு மதுரை ஆதீனம் சவால்..!

இதையும் படிங்க : ஆதீனத்தை தோளில் சுமக்க நான் நேரில் வரேன்.. பாஜக நடத்தி காட்டும்.. திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!