நாராணசாமி தனது சொந்த கட்சி தலைவரிடமே பொய் சொன்னவர்... காங்கிரஸை கிழித்து தொங்கவிடும் பிரதமர் மோடி..!

Published : Feb 25, 2021, 01:49 PM IST
நாராணசாமி தனது சொந்த கட்சி தலைவரிடமே பொய் சொன்னவர்... காங்கிரஸை கிழித்து தொங்கவிடும் பிரதமர் மோடி..!

சுருக்கம்

பொய் சொல்வதில் தங்கம், வெள்ளி பதக்கம் பெறக்கூடியவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

பொய் சொல்வதில் தங்கம், வெள்ளி பதக்கம் பெறக்கூடியவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

அண்மையில் புதுச்சேரி வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீனவப்பகுதி மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது புயலின்போது முதல்வர் நாராயணசாமி இந்த பக்கமே வரவில்லை என மீனவ பெண் ஒருவர் ராகுலிடம் புகார் தெரிவித்தார். ஆனால் மொழிப்பெயர்த்து கொண்டிருந்த அப்போதைய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புயலின்போது நான் பார்வையிட்டதாக அந்த பெண் கூறுகிறார் என்று தவறாக மொழிப்பெயர்த்தார். இதுகுறித்து வீடியோ வைரலாக பரவியது.

இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்;- மீனவ பெண் கூறிய புகாரை தவறாக மொழி பெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர் நாராணசாமி. முதலமைச்சர் தனது சொந்த கட்சி தலைவரிடமே பொய் கூறினார். முதல்வர் மீது பெண் ஒருவர் குறை சொன்ன வீடியோவை தேசமே பார்த்தது. 

மேலும், முன்னாள் முதல்வருக்கு ஏழை மக்களுக்கு உதவும் எண்ணம் இல்லை. பெரும் நம்பிக்கையோடு வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.  முந்தைய காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீர்குலைத்தது.  பொய் சொல்வதில் தங்கம், வெள்ளி பதக்கம் பெறக்கூடியவர்கள் காங்கிரஸ் கட்சியினர். புதுச்சேரியில் தற்போது காற்று மாற்றி வீசி வருகின்றது. மாநில மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். காங்கிரஸ் பிரிவினைவாத அரசியல் செய்கிறது. வர்த்தகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா, ஆகியவற்றில் புதுச்சேரி சிறந்து விளங்கும்.   புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது முதல் தேர்தல் வாக்குறுதி என  தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!