பொய் சொல்வதில் காங்கிரஸ்காரர்கள் பதக்கம் வாங்குவார்கள்.. ராகுல்காந்தி, நாராயணசாமியை பிச்சு உதறிய மோடி.

Published : Feb 25, 2021, 01:29 PM IST
பொய் சொல்வதில் காங்கிரஸ்காரர்கள் பதக்கம் வாங்குவார்கள்.. ராகுல்காந்தி, நாராயணசாமியை பிச்சு உதறிய மோடி.

சுருக்கம்

சில நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு மாநிலத்திற்கும், மற்றொரு மாநிலத்துக்கும், அல்லது ஒரு சமுதாயத்தினருக்கும் இன்னொரு சமுதாயத்தினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் தூண்டி வருகின்றனர்.  

மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் செய்து வருகிறது எனவும், பொய் சொல்வதில்  காங்கிரஸ்காரர்கள் வெள்ளி, தங்கம், வெண்கலம் என அழைத்து பதக்கங்களையும் பெறுவார்கள் என பிரதமர் மோடி அக்கட்சியினரை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரைக்காக புதுச்சேரி வந்த அவர் இவ்வாறு பேசினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தற்போதே தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்காக பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவருகின்றன. எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு தொடர் பயணம் மேற்கொண்டு வருகிறார்.  இந்நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர் காலை 10:30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இந்நிலையில் புதுச்சேரிக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்ற அவர் அங்கு பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கு உரையாற்றிய அவர் கூறியதாவது: 

 

புதுச்சேரி காங்கிரஸ் அரசு பஞ்சாயத்து தேர்தலை நடத்தவில்லை, ஆனால் குஜராத், காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. ஆனால் புதுச்சேரியில் அது நடைபெறவில்லை, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரத்தை கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பார்த்து இருப்பீர்கள், அவர்கள் தேசிய அளவில் எந்த அளவில் செயல்படுகிறார்கள் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்,  காலனி ஆதிக்கத்தின் ஆட்சியைப் போல் அவர்கள் பிரித்தாலும் கொள்கையை பயன்படுத்துகிறார்கள், மக்களைப் பிரித்து பொய்களைக் கூறி, அவர்களை ஆட்சி செய்வதே காங்கிரஸின் கொள்கை கலாச்சாரமாக இருந்து வருகிறது. 

சில நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு மாநிலத்திற்கும், மற்றொரு மாநிலத்துக்கும், அல்லது ஒரு சமுதாயத்தினருக்கும் இன்னொரு சமுதாயத்தினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் தூண்டி வருகின்றனர். இதுதான் காங்கிரசின் கலாச்சாரம், மீனவ பெண்கள் ராகுல் காந்தியை சந்தித்தபோது தாஃகள் புநல் தேரத்தில் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பதையும் அப்போது காங்கிரசார் ஒருவர் கூட தங்களை வந்து பார்க்கவில்லை என்று கூறினர், ஆனால் நாராயணசாமி அதை தவறாக மொழி பெயர்த்து ராகுலிடமே பொய் சென்னவர். அதேபோல் ராகுல் காந்தி, மீனவர்களுக்கு புதிய மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் என கூறுகிறார், இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது, நமது பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டுதான்  மீனவர்களுக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முன் இருந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்டதைவிட 50 சதவீதம் அதிகம். ஆக மொத்தத்தில் பொய் சொல்வதில், வெள்ளி, தங்கம் வெண்கலம் என  அனைத்து பதக்கங்களையும் காங்கிரஸ் கார ர்கள் பெற்வார்கள். காங்கிரஸ் நாடு முழுதும் பிரிவினைவாத அரசியல் செய்கிறது, ஆனால்தான் இந்த அரசை மக்கள்  புறக்கணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.  

 

PREV
click me!

Recommended Stories

Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!