புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே முதல் தேர்தல் வாக்குறுதி... பிரதமர் மோடி அதிரடி..!

By vinoth kumarFirst Published Feb 25, 2021, 1:26 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் நாராணசாமிக்கு ஏழை மக்களுக்கு உதவும் எண்ணம் இல்லை. பெரும் நம்பிக்கையோடு வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

முன்னாள் முதல்வர் நாராணசாமிக்கு ஏழை மக்களுக்கு உதவும் எண்ணம் இல்லை. பெரும் நம்பிக்கையோடு வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்;- புதுச்சேரியில் மக்கள் சக்தியால் இயங்கும் அரசு வரும் சட்டமன்ற தேர்தலில் அமையும். புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை. மத்திய நிதியை பயன்படுத்தவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்து புதுச்சேரி மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி இயங்கிய புதுச்சேரி அரசு அனைத்து நிர்வாகத்தையும் சீரழித்துவிட்டது. 

மீனவ பெண் கூறிய புகாரை தவறாக மொழி பெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர் நாராணசாமி. முதலமைச்சர் தனது சொந்த கட்சி தலைவரிடமே பொய் கூறினார். முதல்வர் மீது பெண் ஒருவர் குறை சொன்ன வீடியோவை தேசமே பார்த்தது. புயல் நேரத்தில் யாரும் வந்து பார்க்கவில்லை என மீனவ பெண் கூறிய புகார் பற்றி பிரதமர் மோடி பேசி வருகிறார். 

மேலும், முன்னாள் முதல்வருக்கு ஏழை மக்களுக்கு உதவும் எண்ணம் இல்லை. பெரும் நம்பிக்கையோடு வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.  முந்தைய காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீர்குலைத்தது. அடுத்து அமையப் போகும் அரசு மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுக்கும். புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த காங்கிரஸ் இடையூறு. ஜனநாயக விரோத காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பார்கள். காஷ்மீரில் கூட தேர்தல் நடந்த நிலையில், புதுச்சேரியில் நடத்தாதது ஏன்? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். பொய் சொல்வதில் தங்கம், வெள்ளி பதக்கம் பெறக்கூடியவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். 

புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். கூட்டுறவுத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது முதல் தேர்தல் வாக்குறுதி என்றார். 

click me!