புதுச்சேரி மக்கள் புத்திசாலிகள்.. புதுச்சேரி மண் அழகானது.. மோடி அதிரடி சரவெடி பேச்சு.

By Ezhilarasan BabuFirst Published Feb 25, 2021, 12:45 PM IST
Highlights

புதுச்சேரி பன்முகத்தன்மை கொண்டது எனவும், புதுச்சேரி மக்களின்  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி உரையாற்றினார்.  

புதுச்சேரி பன்முகத்தன்மை கொண்டது எனவும், புதுச்சேரி மக்களின்  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி உரையாற்றினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரைக்காக புதுச்சேரி வந்த அவர் இவ்வாறு பேசினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தற்போதே தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்காக பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவருகின்றன. எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு தொடர் பயணம் மேற்கொண்டு வருகிறார்.  இந்நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர் காலை 10:30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இந்நிலையில் புதுச்சேரிக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்ற அவர் அங்கு ரூபாய் 2,426 கோடியில் 56 கிலோ மீட்டர் தூரம் அமையும்  சதானந்தபுரம்-நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

மேலும் காரைக்காலில் 491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார், மேலும் சாகர்மாலா திட்டம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழையாலான ஓடுதளம், ஜிப்மர் வர்த்தக மையம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் தங்கும் விடுதியையும், புதுவை நகராட்சி கட்டிடத்தையும் திறந்துவைத்தார். ஜிப்மரில் ரூபாய் 28 கோடியில் ஆராய்ச்சி கட்டணத்துடன் கூடிய ரத்த வங்கிகளும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

புதுச்சேரியில் 15 கோடியில் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க கட்டிடமான மேரி கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்,  புதுச்சேரி வரலாற்றின் அடையாளமாக மேரி கட்டிடம் பிரஞ்சு கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது ஆகும். அப்போது பேசிய அவர் புதுச்சேரி பல்வேறு புரட்சியாளர்களை தாங்கிய மண், மகாகவி சுப்ரமணிய பாரதி இங்குதான் இருந்தார், சுவாமி அரவிந்தர் கூட இந்த கடற்கரையில் தான் கால் வைத்தார். இந்தியாவின் வளர்ச்சியை உத்தரவாதப்படுத்த நமக்கு உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு தேவைப்படுகிறது, குறிப்பாக புதுச்சேரி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கிராமப்புறம் மற்றும் கடலோர தொடர்புகளை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த சாலை கட்டமைப்புகளால் விவசாய மக்கள் பயனடைய முடியும்,  விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   எனவேதான் நாம் தற்போது சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். சுகாதார துறையில் முதலீடு செய்யும் நாடுகள் எதிர்காலத்தில் பிரகாசிக்கும், அதற்காகத்தான் ஜிப்மரில் ரத்தம் மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது, ரத்தம் மற்றும் ரத்த நாளங்களில் நீண்ட நாட்களுக்கு  பாதுகாத்து வைக்க சிறப்பை இந்த மையம் பெற்றுள்ளது. மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது புதுச்சேரி மக்கள் புத்திசாலிகள், புதுச்சேரி மணி அழகானது இந்த மக்களுக்கு துணை நிற்கத்தான் நான் புதுச்சேரிக்கு வந்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். 
 

click me!