புதுச்சேரி மக்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்.. கடற்கரை தான் அவர்களுக்கு உயிர் நாடி..பட்டையை கிளப்பும் பிரதமர்

By vinoth kumarFirst Published Feb 25, 2021, 12:42 PM IST
Highlights

வருங்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையாக சுகாதாரத்துறை இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வருங்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையாக சுகாதாரத்துறை இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசுகையில்;- புதுச்சேரி மக்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். கடற்கரை தான் புதுச்சேரியின் உயிர் நாடி.  பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக புதுச்சேரி இருக்கிறது. புதுச்சேரி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர். 

புதுச்சேரி மண் பன்முகத்தன்மையின் அடையாளம். இங்கிருந்து பல்வேறு புரட்சியாளர்கள் வந்துள்ளனர். புதுச்சேரியின் புனிதத்தன்மை மீண்டும் என்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது. கிராமப்புற, கடலோர பகுதிகளை இணைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 

மேலும், பேசிய பிரதமர் வருங்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையாக சுகாதாரத்துறை இருக்கும். நாடு முழுவதும் உள்ள வேளாண் மக்களுக்கு 4 வழிச்சாலை பயனளிக்கிறது. புதிய 4 வழிச்சாலை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்படும். 4 வழிச்சாலையால் திருநள்ளாறு சனூஸ்வரர் கோயில், வேளாங்கண்ணி பேராயத்திற்கு எளிதாக செல்லலாம். வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை 4 வழிச்சாலை  உயர்த்துவதாகவும் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

click me!